Dengue Fever
0 15 September 2017

டெங்கு காய்ச்சல்
Created by J.jayapriyanka (M.Sc.,Foods & Nutrition & Dietetics)

de

டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய்

அறிகுறிகள் :

  • அதிக காய்ச்சல்,
  • தலைவலி, உடம்பு வலி,
  • கடுமையான தசை வலி,
  • சோர்ந்து போதல், முட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மற்றம் ஏற்படுத்தும்.

இதில் குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் இருக்கும் மூன்று நோய் அறிகுறி. இதுபோக இரத்த கசிவுகளை ஏற்படுத்தலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை இல்லையெனில் ஏற்படும் பிரச்சனைகள்:

  • வயிற்றில் அதிக வலி 
  • குமட்டல் 
  • உடல் வலி 
  • கல்லீரலில் நீர் சேர்தல் 
  • நெஞ்சில் நீர் சேர்தல் 

தலைவலி போன்றவை ஆகும். காய்ச்சலை கட்டுப்படுத்துதலும், பிளேட்லெட் எண்ணிக்கை குறையாது கவனித்து சீர் செய்தலுமே இத்தாக்குதலுக்கு உரிய மருத்துவ சிகிச்சை ஆகும்.
`நில வேம்பு’ குடிநீர் இந்த காய்ச்சலுக்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது.

டெங்குக்கு பப்பாளி :

பப்பாளி இலை சாறு டெங்கு காய்ச்சலை சரி செய்வதாகக் கூறப்படுகிறது  . நிறைய விஞ்ஞான ஆய்வுகள் இதைப் பற்றி செய்யப்பட்டுள்ளன. பப்பாளி இலை சாறு நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் திறன் கொண்டது. மலேரியா, புற்றுநோய் இவற்றினை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வுகள் கூறுகின்றன. 

பப்பாளி இலையில் உள்ள கைமோபப்பின், பப்பின் என்ஸைம்கள் இரத்தத்தில் பிளேட்லெட் அளவினை சீர் செய்யும் குணம் கொண்டவை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் கல்லீரலையும் சீர் செய்யும் குணம் கொண்டவை என ஆய்வுகள் கூறுகின்றன. 

டெங்கு வராமல் தவிர்க்க :

  • கொசுக்களாலேயே டெங்கு காய்ச்சல் ஏற்படுவதால் வீட்டைச் சுற்றி எங்கும் நீர் தேக்கம் இல்லாமல் இருக்கச் செய்யுங்கள்.
  • வீட்டிலும் காலி பக்கெட் போன்றவைகளை சிறிதும் நீர் இல்லாமல் கவிழ்த்து வையுங்கள். 
  • கொசு தவிர்ப்பிற்கான வலை, மருந்து இவற்றினை கண்டிப்பாய் பயன்படுத்துங்கள். 
  • மூடிய கதவின் கீழ் சிறிது இடைவெளி கிடைத்தாலும் கொசு புகுந்து விடும். கவனம் தேவை. 
  • குப்பை கூடையை நன்கு மூடி வையுங்கள்.
  • அறைக்கதவுகளை மூடி சிறிது கற்பூரம் கொளுத்தி வையுங்கள். 15 நிமிடம் கதவை திறக்காதீர்கள். கொசுக்கள் ஓடிவிடும்.
  • நொச்சி செடியினை வீட்டில் வைக்க கொசு கிட்டே வராது.

fr

  

Posted in Blog




 

 

Leave a message